இந்த வருடத்திற்காக தொடங்கப்பட்ட பிக்பாஸ் 3 நிகழ்ச்சி பத்து வாரங்களை தாண்டிவிட்டது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து அபிராமி 9-வது போட்டியாளராக வெளியேறினார். இந்த வருடம் பல சர்ச்சைகளை உள்ளடக்கி சென்றுகொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரீயாக கஸ்தூரியும், மக்களால் வெளியேற்றப்பட்ட வனிதாவும் மீண்டும் நுழைந்திருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் சாக்ஷி தற்போது தன்னுடைய பழைய பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் மால் ஒன்றில் ஆடை வடிவமைப்பின் பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. அதில் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சாக்ஷி பேசியது, பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த பிறகே ஊதியம் வழங்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டது என்று மதுமிதா புகார் குறித்து தெரிவித்திருந்தார். இதனால் மதுமிதா செய்தது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சேரன் வெற்றிபெற்றால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.