சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் ‘ஃபயர் சாங்...’, ‘யோலோ’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 26ஆம் சென்னையில் நடக்கவுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளது படக்குழு.
இந்த நிலையில் இப்படத்திற்கு வசனம் எழுதிய பாடலாசிரியர் மதன் கார்கி படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று கங்குவா படத்தை முழுவதுமாக பார்த்தேன். டப்பிங் பணிகளின் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு முறைக்கு மேல் பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறையும் காட்சிகளின் தாக்கம் அதிகரிக்கிறது. மிகப்பிரம்மாண்டமான காட்சிகள், கலையின் நுணுக்கமான விஷயங்கள், கதையின் ஆழம், இசை மற்றும் சூர்யாவின் நடிப்பு என எல்லாம் ஒன்றிணைந்து ஒரு சிறந்த படமாக கங்குவா உருவாகியிருக்கிறது. இதை உருவாக்கியதற்காக சிவா மற்றும் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு எனது நன்றிகள்” என குறிப்பிட்டுள்ளார்.
Watched the full version of #Kanguva today. I’ve seen each scene more than a hundred times during the dubbing process, yet the impact of the movie grows with every viewing.
The grandeur of the visuals, the intricate detailing of the art, the depth of the story, and the majesty…— Madhan Karky (@madhankarky) October 23, 2024