உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டநிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் ரஷ்ய இராணுவ வாகனங்கள் உக்ரைனின் தலைநகர் கீவ்-க்குள் நுழைந்துள்ளன. விரைவில் கீவ் நகரை ரஷ்யா கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
I despise war
That will have adverse impact on the hip bones of the world
The bomb that fell on the city of Kyiv
Will break even the green-vegetables’ seller’s basket in Keeripatti village
Russia should stop the war
The #G7 sanctions on #Russia should be revoked
I despise war
— வைரமுத்து (@Vairamuthu) February 25, 2022