Skip to main content

மீண்டும் விஜய்யுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Lokesh Kanagaraj reunites with Vijay in next movie

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்  'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.  செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைப் பிரபல சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.  'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

இப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார் . இப்படத்தை  தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

 

இந்நிலையில் 'விஜய் 67' வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி  இணையவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 'விஜய் 67' படத்தை பிரபல தயாரிப்பாளர்  கலைப்புலி  எஸ் தாணு தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்