Skip to main content

ரஜினி பட வாய்ப்புக்கு 'நோ' சொன்ன லியோனி!

Published on 28/03/2018 | Edited on 29/03/2018
i leone


பட்டிமன்றம் புகழ் திண்டுக்கல் ஐ.லியோனி தன் பிறந்தநாளை முன்னிட்டு தான் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார்.  சென்னையில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் புத்தகத்தை வெளியிட இயக்குனர் சீனுராமசாமி பெற்றுக் கொண்டார். முன்னதாக இந்த புத்தகத்திற்கு திமுக செயல் தலைவரும், சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கவிஞர் பா.விஜய், யுகபாரதி ஆகியோர் அணிந்துரை வழங்கினர். பிறகு விழாவில்  திண்டுக்கல் ஐ.லியோனி பேசும்போது..."நான் நடித்த ஒரே திரைப்படம் ‘கங்கா கௌரி’. இதில் அருண் விஜய், வடிவேலுக்கு அப்பாவாக நடித்தேன். இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. பின்னர், ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் பட்டிமன்றம் ராஜா நடித்த கதாபாத்திரத்தில் என்னைத்தான் நடிக்க வைக்க அணுகினார்கள். ஆனால் நான் தான் மறுத்து விட்டேன். இந்நிலையில் தற்போது, வடிவேலு என்னிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அதில் வடிவேலு, ரோபோ சங்கர், சூரி ஆகியோர் அண்ணன் தம்பிகள். இவர்களுக்கு நான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று கூறினார். மீண்டும் என்னுடன் நடிக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதுபோல், இயக்குனர் சீனு ராமசாமியும், அவர் இயக்கும் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்" என்றார். 

சார்ந்த செய்திகள்