Skip to main content

கே.கே. மரணத்தில் சந்தேகம்? - கொல்கத்தா காவல் துறையினர் வழக்குப் பதிவு

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

K.K. Suspicion of death? - Kolkata Police registered a case

 

கிருஷ்ணகுமார் குன்னத், பிரபல பின்னணி பாடகரான இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.  

 

இந்நிலையில் பாடகர் கே.கே-வின் மரணம் இயற்கைக்கு மாறாக உள்ளது என கொல்கத்தா புது மார்க்கெட் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கொல்கத்தாவில் நேற்று நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் இருக்கைக்கு மேல் அதிகமான நபர்கள் பங்கேற்றுள்ளனர். ஏசியும் குறைக்கப்பட்டு அதிக வெப்பம் மற்றும் இறுக்கமான சூழ்நிலையாக இருந்துள்ளது. அதனால் கேகே மேடையை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பிறகு தான் தங்கியிருந்த விடுதிக்கு அவரது பாதுகாவலர்களின் உதவியால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். விடுதிக்கு சென்ற பிறகு மயக்கம் காரணமாக கீழே விழுந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிறகு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கே.கே-வின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கே.கே-வின் உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது உடலின் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.  

 

இதனைத் தொடர்ந்து கே.கே. தங்கியிருந்த விடுதி, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கே.கே.வின் குடும்பத்தினர் கொல்கத்தா சென்றடைந்துள்ளனர். கே.கே.வின் உடற்கூராய்வு பரிசோதனை முடிந்ததும், அவரது உடல் மும்பைக்கு எடுத்து செல்லப்பட உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்