Skip to main content

"உன் கையை நம்பி உயர்ந்திட பாரு, உனக்கென எழுது ஒரு வரலாறு" - அஜித் பட நிறுவனம்

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
vsafs

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். இதையடுத்து அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா எஸ்.பி.பி. உடல்நலம் குணமாக வேண்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கச்செய்து கூட்டு பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தார். 

 

இதை ஆதரிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் கூட்டு பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். மேலும் ரசிகர்கள் மற்றும் சில பிரபலங்கள் வீடுகள், கோயில்கள் என அனைத்திலுமே எஸ்.பி.பிக்காக பிரார்த்தனை செய்தார்கள். இந்நிலையில் எஸ்.பி.பி. குணமாக வேண்டி அஜித்தின் விஸ்வாசம் படத்தை வெளியிட்ட கே.ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில்..."உன் கையை நம்பி உயர்ந்திட பாரு, உனக்கென எழுது ஒரு வரலாறு" தனது ஒவ்வொரு பாடலிலும் வரலாறு படைத்த மனிதன்... எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சார் விரைவில் நோயிலிருந்து மீளுவார் என்று நம்புகிறேன். விரைவில் நலம் பெறுங்கள் சார்! உங்கள் குரலில் இன்னும் பல அற்புதமான பாடல்களைக் கேட்க விரும்புகிறோம்" என பதிவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்