Skip to main content

கிறிஸ்துமஸ் விடுமுறையை மீண்டும் குறிவைக்கும் 'கே.ஜி.எஃப் 2' டீம்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021
gdbdbdfs

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகிவருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' திரைப்படம் ஜுலை 16ஆம் தேதி வெளியாகும் என கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் அறிவித்த படக்குழு, அதற்கேற்ப இறுதிக்கட்டப் பணிகள், பட வியாபாரம் உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்திவந்தது. தற்போது கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

 

இதனால், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தைத் திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்வதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்புநிலை திரும்பிய பிறகே, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் திட்டமிட்டபடி நிறைவு செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், புதிய வெளியீட்டு தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று இயக்குநர் பிரஷாந்த் நீல் நேற்று (06.07.2021) அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'தியேட்டர்களில் கேங்ஸ்டர்கள் நிறைந்திருக்குமபோதுதான் மான்ஸ்டர் வருவார். அவர் வரும் புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்' என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படத்தை வருகிற டிசம்பர் மாதத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்துவிடும் என்பதால் படக்குழு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படமும் இதே டிசம்பர் விடுமுறையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்