'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
திரை பிரபலங்கள் சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். மேலும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தார். இந்திய சினிமாவில் ஒரு தலைசிறந்த படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார்.
இப்படம் பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கஸ்தூரி இப்படத்தை பார்த்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதை, "காந்தாரா படம் பார்த்து இரண்டு காரணங்களால் சற்று ஏமாற்றமடைந்தேன். முதலில், திரையரங்கில் பார்க்கப்பட்ட சிறந்த திரைப்படங்களில் காந்தாராவும் ஒன்று. ஆனால் அமேசான் நிறுவனம், அவர்களது ஓடிடி தளத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும். இரண்டு, வராஹரூபம் பாடலின் முதல் வெர்ஷனை மிஸ் செய்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் இடம் பெறும் 'வராஹ ரூபம்’ பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக ‘தய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற மலையாள இசைக்குழு புகார் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து 'வராஹ ரூபம்’ பாடல் ஓடிடியில் நீக்கப்பட்டு புது பாடல் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Kantaraonprime- a bit disappointing for 2 reasons-
1)Kantara is one of those brilliant movies best watched in a theater setting. And @PrimeVideoIN really needs to revamp its interface if it needs to stay in the game. Your controls dont work, when they do, don't go away.
cont— Kasturi Shankar (@KasthuriShankar) November 24, 2022