Skip to main content

'MGR கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? -  கஸ்தூரி விளக்கம் 

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

நேற்று முன்தினம் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் குறித்து நடிகை கஸ்தூரி ‘என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகை லதா கண்டம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில், இதுகுறித்து கஸ்தூரி சமூகவலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்... 

 

kasthuri

 

"MGR காதல் காட்சியில் நடித்ததில், கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை. புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான். உடனே அமைதிப்படை அல்வா, தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு - நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை. MGR அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல. இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்