ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பில்லா பாண்டி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்தது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ் அஜித் குறித்து பேசும்போது... "என்னை பலரும் வழி நடத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள். என்னை வழிநடத்துவது அய்யா பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் மட்டுமே. அதுபோல் தம்பி ஆர்.கே சுரேஷ் இதே வழியை பின்பற்றி நன்றாக வாழ வேண்டும். தைரியமாகவும், வீரமாகவும் இருக்க வேண்டும். இந்த படம் அஜித்தை சம்பந்தப்படுத்தியது என்பதனால் அஜித்திடம் எனக்கு பிடித்த விஷயத்தை சொல்கிறேன். அஜித் எந்த அளவுக்கு வீரமானவர் என்றால்...? சில வருடங்களுக்கு முன்பு நடந்த சினிமா விழாவில் மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் அஜித் பேசும்போது... "எங்களுக்கு இது போல் நிகழ்ச்சிகளுக்கு வர விருப்பமில்லை. உங்கள் காட்சியை சார்ந்தவர்கள் வறுபுறுத்தி கூப்பிடுகிறார்கள். நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை. நாங்கள் நடிகர்கள். நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையை செய்கிறோம். எங்களை ஃபிரீயா விடுங்கள்" என்று முதல்வர் முன் நேருக்கு நேராக சொன்னார். அஜித் இப்படி சொன்னவுடன் அனைவரும் கைதட்டலாமா வேண்டாமா எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் முதலில் கைதட்டியவன் நான்தான். வாழ்க வளமுடன் நன்றி" என்றார்.