Skip to main content

கார்த்திக் சுப்புராஜுக்குள் இப்படி ஒரு ஆளா? - ரஜினி ரசிகர்களுக்கு வைத்திருக்கும் விருந்து

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று பேட்ட படத்தின் டீஸர் வெளியிடுவடதாக படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இது டீஸர் இல்லை ட்ரீட்ஸர் என்று குறிப்பிட்டிருந்தது படக்குழு. இந்த வீடியோ முழுக்க முழுக்க ரஜினியிஸத்தை மட்டும் காட்டப்போவதாக தெரிவித்திருந்தனர். ஆம், சொன்னதை போன்றே இது முழுக்க ரஜினியின் ஸ்டைல், மாஸ் இந்த இரண்டை வைத்து 1 நிமிடம் 32 விநாடிகளுக்குள் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் ட்ரீட்சராக சமர்ப்பித்துள்ளது படக்குழு. 

 

rajini in petta


முதலில் பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் நடந்து வரும்போது, அவரது கால்களை மட்டும் காட்டி பிறகு சில்லுஹுவேட்டில் முழு ரஜினியை காட்டுவார்கள். அதனுடன் பின்னணி இசை மற்றும் ஷூ சத்தத்தை மையமாக காட்டியிருப்பார்கள். அதை போன்று இந்த டீஸரின் தொடக்கத்தில் ரஜினி நடக்க, அவரது கால்களை மட்டும் காட்டி பின்னர் பின்னணி இசை மற்றும் ஷூ சத்தத்தை காட்டி பார்வையாளர்களான நமக்கு நாஸ்டால்ஜியா ஏற்படுத்துகின்றனர். அடுத்த ஷாட்டில் , ஒரு முட்டு சந்தில் ஒரு கும்பல் டார்ச் லைட்டுகளை வைத்துகொண்டு சிலரை அடிக்க, ரஜினி அப்படியே சில்லௌட்டில் நடந்து சென்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு கெத்தாக திரும்பி நிற்க, கையை உயர்த்தி செய்கையில் அடிப்பதை நிறுத்த சொல்கிறார். அக்காட்சியின்போது பின்னணி இசையுடன், தலைவா தலைவா என்னும் ஒலி கேட்க, துப்பாக்கி சத்தம் கேட்கிறது. படத்தில் ஆக்‌ஷன் தாராலமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை கூட்டுகிறது. அந்த காட்சியில் வரும் ஒளியும் தளபதி படத்தில் வரும் சிவந்த நிற டோனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

p2


பாட்ஷா காலத்திற்கு நம்மை கொண்டு சென்ற அடுத்த நொடியே, முரட்டுக் காளையின் ‘அண்ணனுக்கு ஜே’ வசனத்தை எழுதி வைத்த பலகை, வயதான கெட்டப்பாக இருந்தாலும் ஸ்டைலாக கையில் எதோ ஒரு சாப்பாட்டு பண்டத்தை எடுத்து வருகிறார் ரஜினி காந்த். அண்ணனுக்கு ஜே ! பலகைக்கு பக்கத்தில் பிரிடிஷ் கொடி மற்றும் வெறோரு கொடி இருக்கிறது.

இதனை அடுத்து அண்ணாமலை படத்தில் போடப்பட்ட சூப்பர் ஸ்டார் நேம் ப்லேட் மற்றும் அதே இசையில் சிறிது மாற்றம் செய்த ஷாட் பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கிறது. சூப்பர் ஸ்டார் நேம் ப்ளேட் வரும்போது பின்னணி இசையில் ஹேய்! ஹேய்! என்கிற கோரஸை கேட்கையில் எல்லோருக்குள்ளும் இருக்கிற ரஜினி ரசிகர் மொமண்டை வெளியே எட்டிப்பார்க்க செய்கிறது. 
 

p3


இதையடுத்து வரும் ஷாட்டில் கல்லூரி அல்லது ஹாஸ்டலில் நடக்கும் ஃப்ரெஷர்ஸ் விழா போன்று காட்டப்படுகிறது.  இளைஞர்கள்  நடுவில் இளமை துள்ள, பழைய ஸ்டைல் நடையில் நடந்து செல்கிறார் ரஜினி. அடுத்த ஷாட்டிலேயே மதுரை இளைஞராக சிங்கம் மீசை, பட்டு வேஷ்டி பட்டு சட்டை, கழுத்தில் புலி பல் செயின்  என்ற கெட்டபில் நடந்துவருகிறார். அங்கு பலருக்கு  பிரியாணி பரிமாறப்படுகிறது. அந்த இடத்தில் ப்ரூஸ் லீ ஓவியம், ப்ரூஸ் லீ படம், நுன்சாக் போன்றவை இருப்பதை பார்த்தால் அது ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுகொடுக்கும் இடமாக இருக்கிறது. 70-80 களில் ப்ரூஸ் லீக்கு தமிழகத்தில் பல ரசிகர்கள் இருந்ததும், அவரை இன்ஸ்பர் செய்து வாழ்கையை முன்னுக்கு சென்றவர்களில் ஒருவராக  இந்த காளி இருப்பாரோ என்று தோணுகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுத்தருபவாராக கூட இருக்கலாம். 

முனிஸ்காந்த், மாணவர்கள்  ‘வி லவ் யூ தலைவா’ என்னும் கிராஃபைட் ஓவியத்தை வரைந்து ரஜினி சாருக்கு காட்டுவது போன்ற காட்சியை வைத்துள்ளனர். அது டீஸருக்காகவே, அதுவும் ரஜினியின் பிறந்தாளுக்கு வெளியிடும்போது ரசிகர்கள் ரஜினிக்கு தெரிவிப்பது போன்று உள்ளது. இது முழுக்க முழுக்க ரஜினிஸம் உள்ள டீஸர் என்பதை முன்னமே தெரிவித்திருந்தது படக்குழு. அதைபோலவே, ரஜினியை தவிர படத்தில் நடித்த வேறு யாருடையை காட்சியும் காட்டப்படவில்லை. டீஸரின் இறுதி ஷாட்டாக ரஜினியின் ட்ரேட் மார்க் ஷாட்டான கூலிங் கிளாஸை சுழற்றி மாட்டுவதை காட்டுகின்றனர். பஞ்ச் பேசுவார் என்று எதிர்பார்க்கையில், அழகிய சிரிப்புடன் ப்ரேமை விட்டு சொல்கிறார். விரைவில் ட்ரைலர் என்று அறிவித்து முடித்துவிட்டனர்.  
 

p4


டீஸரை ரஜினி ரசிகனாக பார்க்கையில், ரஜினியின் மெகா ஹிட்டுகளான அண்ணாமலை, பாட்சா, தளபதி, படையப்பா, சிவாஜி என்று பல பழைய ரஜினியை நியாபகப்படுத்துகிறது. கார்த்திக் சுப்புராஜுக்குள் இப்படி ஒரு ரஜினி ரசிகரா என்று சொல்லும் அளவுக்கு ரஜினியின் ஸ்டைல் நடை, சிரிப்பு, ஹேர் ஸ்டைல் அத்தனையையும் கொண்டு அமைந்துள்ளது டீசர். இடையில் சில ஆண்டுகள் ரஜினி ரசிகர்கள் மிஸ் பண்ணிய பல விசயங்களை ஒரே விருந்தாக வைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. 

மேலும் பேட்ட டீஸராகப் பார்த்தால், காளி என்னும் ரஜினி, மாணவர்களுக்கு வார்டனா, வாத்தியாரா என்னும் சந்தேகத்தை விட்டுச் சென்றாலும் மாணவர்களுடன் சேர்ந்து ஒரு புரட்சி செய்ய காத்திருக்கிறார் ரஜினி என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு தூண்டியுள்ளது டீசர். அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்துடன் பொங்கலுக்கு பேட்ட படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.