நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் இரு மாநிலங்களின் பிரச்சனையாக மாறியுள்ளது. மஹாராஷ்ட்ரா அரசு அவருடைய மரணத்தை போலீஸார் விசாரித்து வந்தது. இதனை தொடர்ந்து பீகார் மாநிலத்திலுள்ள சுஷாந்தின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் சுஷாந்த் தற்கொலை குறித்து அவருடைய காதலி ரியா மீது புகாரளித்தார். மஹாராஷ்ட்ரா அரசு சுஷாந்த் மரணத்தை கண்டுகொள்ளவில்லை என்று பீகார் துணை முதல்வர் தெரிவித்தார். இதன்பின் மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே இதை அரசியலாக்க வேண்டாம் என்று தெரிவித்தார். சுஷாந்த் மரணம் குறித்து விசாரிக்க வந்த பீகாரை சேர்ந்த அதிகாரியை தனிமைப்படுத்த அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் பீகார் அரசு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு வருத்தம் தெரிவித்த ஆதித்ய தாக்கரே, தங்கள் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட மாட்டேன் என விளக்கம் அளித்திருந்தார். தன் மீது பழிபோடுவது மோசமான அரசியல் என்றும், சுஷாந்த் வழக்கை அரசியலாக்க தொடங்கி விட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் உத்தவ் தாக்கரேவையும், ஆதித்ய தாக்கரேவையும் விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மோசமான அரசியல் பற்றி யார் பேசுகிறார் என்பதை பாருங்கள். உங்கள் தந்தைக்கு எப்படி முதல்வர் பதவி கிடைத்தது? சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான சில கேள்விகளுக்கு உங்கள் தந்தையை பதிலளிக்க சொல்லுங்கள்.
1)ரியா எங்கே?
2)சுஷாந்த் மரணம் தொடர்பாக மும்பை காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாதது ஏன்?
3)சுஷாந்த் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த பிறகு அதனை தற்கொலை என போலீசார் கூறியது ஏன்?
4)சுஷாந்த் கொலை செய்யப்பட்ட வாரத்தில், அவரை அழைத்து பேசியவர்களின் செல்போன் தரவுகள் ஏன் நம்மிடம் இல்லை?
5)தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரியை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பது ஏன்?
6)சிபிஐ விசாரணக்கு அஞ்சுவது ஏன்?
7)ரியாவும், அவரது குடும்பத்தினரும் ஏன் சுஷாந்த் பணத்தை கொள்ளையடித்தார்கள்?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.