உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஸ் ப்ளட் கமியூனி என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு விரைந்து ரத்தம் வழங்கப்படவுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், "எல்லாரும் கமல்ஹாசன் மறுபடியும் நடிக்க போய்ட்டாருன்னு சொன்னாங்க, சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான். அப்படிப்பட்ட தலைவர்களைத் தான் நாம் பார்த்திருக்கிறோம். காந்தியடிகளுக்கு சினிமா பிடிக்காது. ஆனால் அவரையே திரையின் வழியே பார்த்தவர்களே அதிகம். காந்தியின் தண்டி யாத்திரையை நான் திரையில் மூலம் தான் பார்த்தேன். நான் விக்ரம் படத்தை கொண்டாட இங்கு வரவில்லை. நான் ஏற வேண்டிய மலை பெரியது. படிப்படியாக ஏறிக் கொண்டிருக்கிறேன். அதில் இது ஒரு படிக்கட்டு. அப்போது இருந்த எனது வீரமும் வைராக்கியமும் கொஞ்சம் கூட குறையவில்லை. தொடர்ந்து என் படங்களில் அரசியலும், சமூக சேவை குறித்த வசனங்களும் வந்துகொண்டே இருக்கும்" என்றார்