
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமலஹாசன் இயக்கி நடித்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் தலைவன் இருக்கிறான் படம் உருவாகி வருகிறது. இதன் முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வரும் நிலையில் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி வைரலாகி வருகிறது. ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்வுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கவுள்ளார். தற்சமயம் 'ப்ரொடக்ஷன் நம்பர் 51' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதில்...

"சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். @sonypicsfilmsin & @RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும். தம்பி @Siva_Kartikeyan, இயக்குனர் @Rajkumar_KP போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். கூடவே கமல்ஹாசன் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.