Skip to main content

”தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை” - கமல் பேச்சு

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

kamal hassan

 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இட்னானி, காயாடு லோகர், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம், செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், “‘வெந்து தணிந்தது காடு’ என்பது பாரதியாரின் வரிகள் அது எனக்கு மிகப்பிடிக்கும், அதன் அடுத்த வரிகள் தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ அது போல் இந்த படத்திலும் அந்த நெருப்பு இருக்குமென நம்புகிறேன். வேல்ஸ் என்னை தந்தை போல் என்பார். அவருக்கு நான் எப்போதும் குடும்பம்தான். நான் தனியாக ஏதும் செய்யவில்லை. தமிழ் படத்தை தூக்கி நிறுத்துவது தமிழ்ப்படம்தான். தமிழ் படத்தை கெடுப்பதும் தமிழ்ப்படம் தான். நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

 

தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றி விழாவில் சிம்பு ஆனந்த கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும். வேட்டையாடு விளையாடு 2 பாகம் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் சொன்னார். ஆனால் இடையில் கரோனா வந்து விட்டது, மீண்டும் நடக்கும். வேல்ஸ் ஃப்லிம்ஸ்ல் படம் செய்ய கேட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி வாய்ப்புகளை நான் தவறவிடுவதில்லை. நாளையே பேசி முடித்துவிடலாம். இந்தப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்