Published on 05/10/2018 | Edited on 05/10/2018
![kajal](http://image.nakkheeran.in/cdn/farfuture/7-lpfHJ3hDXfZBMCl3s056T2-gTuzk99yz1HoZhVwB8/1538760456/sites/default/files/inline-images/maxresdefault_69.jpg)
ஹிந்தியில் வெற்றிபெற்ற 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் தன் போர்ஷனை சமீபத்தில் முடித்த காஜல் அகர்வால் அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ள காஜல் அங்குள்ள வனஉயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுடன் விளையாடினார். அப்போது மலைபாம்பு ஒன்றை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்ட காஜல், அந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்...."இந்த உணர்வு அற்புதமாக இருக்கிறது. பாம்பின் தசைகள் அசைவதை என்னால் தெளிவாக உணர முடிகிறது. பாம்பின் மெல்லிய சத்தமும் எனக்கு கேட்கிறது. இது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்" என்று மெய்சிலிர்த்து கூறியுள்ளார்.