அசோக் செல்வன் நடிப்பில், ரித்து வர்மா ஜோடியாக நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படக்குழுவினர், சென்னையில் நேற்று (30/10/2022) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் அசோக் செல்வன், "ஓ மை கடவுளே எல்லாத்துக்கும் புடிச்சதா? அதோட பாசிட்டிவிட்டி, ஹாப்பினஸ் கொடுத்துச்சுல. முடிச்சிட்டு போகும் போது ஒரு ஃபீலிங் இருந்தது. இந்த படம் அதைக் கொடுக்கும். எனக்கு ஃபேவரைட்டான ஃபிலிம் பர்ஸ்னலி. நான் அதனால தான் தைரியமா ப்ரோமோஷன்ஸ்ல; போய் பாருங்க அப்படினு சொல்ல முடியுது. சம் டைம்ஸ் படத்தை பற்றிச் சொல்ல நமக்கே ஒரு மாதிரி இருக்கு. இந்த படத்த 100% போய் தியேட்டர்ல பாருங்க.
டேக் அவே இந்த படத்துல பியூட்டிஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். நான் அந்த மிராக்கல சொல்றன். நான் மட்டுமல்ல, என் டீமே எக்ஸ்பீரியன்ஸ் பண்ண மிராக்கல் இது. நாங்க ரோடாங் பாஸ் ஹையஸ்ட் மோட்டரபுல் ரோடு உள்ளது. நாங்க அங்க போறோம். பனி போஸன்ஸ சூட் பண்ண போறோம். அங்க போனாத் தான் தெரிந்துச்சு ஸ்னோ இல்லனு. ஓகே ஸ்னோ சீசன் இல்ல. ஆனால் ஸ்னோவுக்காக மொத்த டீமும் நார்த் போயிட்டோம். என்ன பண்றதுன்னு தெரியல. டைரக்டர் மூஞ்சி மூஞ்சாவே இல்ல. சரி வந்துட்டோம், எடுப்போம். நெஸ்ட் டே போனோம் செம்ம வெயில். சம்மர் மாதிரி இருக்கு. சன்னுக்கு நாங்க அவ்வளோ தூரம் போயிருக்க தேவையில்ல.
ரித்து வர்மா ஒருபுறம் நின்னுட்டு இருப்பாங்க; நான் பின்னாடி நிக்கிறேன். அவங்க பின்னாடி வா என்பாங்க. அர்ஜுன் போவான், இதான் சீன். அவங்க அந்த சைடு பாத்துட்டு நின்னுட்டு இருப்பாங்க எடுத்தாச்சு. நெக்ஸ்ட் எனக்கு கேமரா வெக்கிறாங்க, திரும்பி வரணும், சொல்லணும். கேமரா ரோலிங், ஆக்ஷன், திரும்புறன், வரேன்னு சொல்லிட்டு இருக்கேன், மெதுவா தூறுது, மெதுவா ஸ்னோ வருது. நாங்க என்ன ஆசைப்பட்டமோ, அது நடக்குது. ஒரு 10 முதல் 15 மினிஸ்ட்ல ஃபுல்லா ஸ்னோ. ஒரு மிராக்கல். நானும், டைரக்டரும் பாத்துக்கறோம். ஒரு எமோஷ்னல் மொமன்ட் அது. இதெல்லாம் தான் எனக்கு டேக் அவே. அந்த லோக்கல் மேனேஜர் ஓடி வந்து சொல்றாரு. அந்த சீசன்ல ஸ்னோ வந்து 18 வருசம் ஆச்சு.
எனக்கு பிரபாவ பிடிக்கும். அவரோட கொங்கு தமிழ் பேசக் கூடிய வாய்ப்பு கிடைச்சிச்சு. என்னோட சொந்த ஊர் ஈரோடு. ஆனா நான் வளர்ந்தது சென்னை. அந்த ஸ்லாங் சுத்தமா வர்லனு அம்மாவுக்கு வருத்தம். நான் வளர்ந்ததெல்லாம் சென்னை, மெட்ராஸ் தமிழ் தான் வரும். கூப்பிட்டா கூட ஏன் கண்ணு, நம்ம பாஷைல பேசுக் கண்ணுனு சொல்லுவாங்க. அதனால, எதாவது ஒரு படத்துல அந்த மாதிரி ரோல் பண்ணனும்னு ஆசைப்பட்டன். அதனால, இதை பண்ணிட்டன். அவங்க சந்தோஷபடுவாங்க, அதனால எனக்கு சந்தோஷம்". இவ்வாறு நடிகர் அசோக் செல்வன் தெரிவித்தார்.