Skip to main content

'என்றென்றும் உங்களை நேசித்து கொண்டு இருப்பேன் அப்பா' - மறைந்த கே.கே-வின் மகள் உருக்கம்

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

'I will love you forever Dad' - KK's daughter taamara

 

கிருஷ்ணகுமார் குன்னத், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். கே.கே-வின் உடல் கொல்கத்தாவில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டு, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை முதல் ரசிகர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கே.கே-வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

இதனிடையே கே.கே-வின் மகள் தாமரா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அப்பதிவில், கே.கே-வின் இறுதிச்சடங்கு குறித்தான தகவல்களை பகிர்ந்த  அவர் "என்றென்றும் உங்களை நேசித்து கொண்டு இருப்பேன் அப்பா" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். கே.கே-வை போலவே அவரது மகள் தாமராவும் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்