![hip hop aadhi finished his ph.d in music Entrepreneurship](http://image.nakkheeran.in/cdn/farfuture/G8bniDAfwGGkK6Y2y2JBtXiTVg8SVfoHIkqa347k6ik/1679489799/sites/default/files/inline-images/01_89.jpg)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆதி. தொடர்ந்து மீசைய முறுக்கு, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் ‘அன்பறிவு’ படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.கே சரவண் இயக்கும் 'வீரன்' படத்தில் நடித்துள்ளார். மேலும் ஐசரி கணேஷ் தயாரிப்பில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் 'பி.டி சார்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதாக ஆதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதி, "நான் பி.ஹெச்டி முடித்துள்ளேன். ஆனால் படிச்சு வாங்கின டாக்டர் பட்டம். அதனால் டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத் துறையில் (Music Entrepreneurship) முடித்துள்ளேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. இதை முடிக்க கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்திவிட்டேன். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தெலுங்கு படம் ஒன்றிற்கு இசையமைத்து வருகிறேன். தயாரிப்பு பணிகளிலும் ஈடுபடவுள்ளேன். விரைவில் ஒரு படம் இயக்கவும் உள்ளேன்" என்றார்.