இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் ஹீரோவாக நடித்துள்ள ஹரிஸ் கல்யாண் இதற்குமுன் பியார் ப்ரேமா காதல் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். ஐ.ஆர்.ஐ.ஆர் படத்திலும் ஒரு மொரடான காதல் ஹீரோவாக வலம்வருகிறார். அவர் இந்தப் படத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்ட தகவல்களின் தொகுப்பு.
ஒரு படத்தின் ரிலீஸ் என்பது குழந்தைப் பிறக்கிற மாதிரியான எக்ஸைட்டான விஷயம். அந்த உணர்வில்தான் நாங்கள் இருக்கிறோம். இதற்குமுன் நான் நடித்தப் படமும் காதல் படமாக இருந்தாலும் அதில் வருகிற கேரக்டரும் இதில் இருக்கிற கேரக்டரும் வித்தியாசமானது. யார் இந்தப் பையன், ஏன் இவ்வளவு கோவப்படுறான், இவனுக்கு என்ன நடந்துச்சு? இவன் எப்படி ஒரு அழகான சாதுவான பெண்ணை சந்திக்கிறான்? எப்படி இவங்களுக்குள்ள லவ் வருது. அதோட இப்ப இருக்கிற சமூக சூழ்னிலையில பொண்ணுங்க எப்படி பிஹேவ் பண்ணுறாங்க, அதுக்கு பசங்க எப்படி ரியாக்ட் பண்ணுறாங்க, பசங்களோட பிகேவியருக்கு பொண்ணுங்க எப்படி ரியாக்ட் பண்ணுறாங்க? போன்றக் கேள்விகளுக்கு படி படியாக பதில் கொடுக்கிற படம்தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.
பியார் ப்ரேமா காதல் படத்தில் கொஞ்சம் அமைதியான கேரக்டரில் நடித்திருப்பேன். ஆனால், இந்தப் படத்தில் ஒரு கோபமான பையனாக நடிச்சுருக்கேன். அமைதியான கேரக்டரில் நடிக்கும்போது எனக்கு சுலபமா இருந்துச்சு, இந்த படத்தில் வரும் கேரக்டரை என்னால் பண்ண முடியுமானு சந்தேகத்தோடவே நடிச்சேன். ஆனால், இப்போ எந்த மாதிரி கேரக்டரும் பண்ணமுடியும்னு என்கிற அளவுக்கு நம்பிக்கை வந்துடுச்சு. ஏனென்றால், இந்த கேரக்டருடன் என்னை இணைத்துக்கொள்ள ரொம்பவே கஷ்டப்பட்டேன். நான் அந்த கேரக்டரில் இணைந்த மாதிரி படத்தைப் பார்க்கிறவர்களும் இணைந்துவிட்டால் படம் வெற்றியடைஞ்சுடும்.
இந்தப் படத்தில் வருகிற கௌதம் கேரக்டர் பற்றிச் சொல்லனும்னா, எல்லோரும் கோபம் வந்தால் தரையையோ, இல்ல வேற எதயாவது அடிப்போம், நகத்தைக் கடிப்போம். ஆனால், அவன் பாக்ஸிங் பண்ணுவான், பைக் எடுத்துக்கிட்டு எங்கயாவது போய்டுவான், அது நிறைய விஷயங்களைப் பண்ணுவான். ஆனால் அவன் பாக்ஸரோ, பைக் ரேஸரோ இல்லை. ரொமாண்ஸ் பண்றதிலும் இந்த கேரக்டர் ரொம்ப வித்தியாசமானவன். சாதாரணமாகவே இவன் ரொம்ப கோவக்காரன், எல்லாத்துக்கு மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு சண்டப் போடுற ஒரு பையன் இவனுக்கு எப்படி லவ் வரும் என்கிற இயல்பாவே பார்வையாளருக்கு வந்துருக்கும். இதில் வருகிற காட்சியெல்லாம் இயக்குனரோட பாணியில் இப்போ நடக்கிற விஷயங்களோடு ஒப்பிட்டுதான் இருக்கும். லவ் பண்றவுங்க, லவ் பண்ணி பிரிஞ்சவுங்க, கல்யாணம் பண்ணிக்கிட்டவுங்க எல்லாருக்கும் இது கனேக்ட் ஆகும்.
எல்லோரும் பார்க்கக் கூடிய படமாக இருந்தாலும் இதுக்கு யு/ஏ சர்டிஃபிக்கேட் கொடுத்ததிற்கு காரணம் படத்தின் மையக் கருத்துதான் என நினைக்கிறேன். கதையிலும், அதில் வருகிற காதல் காட்சிகளிலும் இருக்கிற ஆழமான கருத்துக்கள், அதோட இருளடைந்த மறுப்பக்கம் இதேல்லாம் ஒரு வகையான வன்முறையாக அவங்க நினைச்சுருக்காங்க. அதனால் தான் இதற்கு யு/ஏ கொடுத்திருக்காங்க. என்று ஹரீஸ் கல்யாண் கூறினார்.