ஹாலிவுட் திரையுலகில் தனுஷ், கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தி கிரே மேன்'. இப்படத்தை 'அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ளனர். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே படக்குழு "ரயன் காஸ்லிங் கதாபாத்திரத்திற்கு பிறகு தனுஷின் கதாபாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. தனுஷின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் விரைவில் அவரது கதாபாத்திரத்தை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம்" என்று சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ரூசோ பிரதர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் 'தி கிரே மேன்' படத்தின் சீக்குவல் அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறோம், இதனை ரியான் கோஸ்லிங், நாங்கள் மற்றும் இணை எழுத்தாளர் ஸ்டீபன் மெக்ஃபீலி ஆகியோரோடு பணியாற்றிவருகிறோம்" என தெரிவித்துள்ளனர். அதோடு படத்திற்கான ஸ்பின் ஆஃப் பணிகளும் நடைபெற்றுவருவதாகவும், இதனை பிரபல எழுத்தாளர்கள் பால் வெர்னிக் மற்றும் ரெட் ரீஸ் எழுதுவதாகவும் ரூசோ பிரதர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ரூசோ பிரதர்ஸஸின் பதிவை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#TheGrayMan Universe…
We’re excited to announce that a sequel to The Gray Man is now in development with star Ryan Gosling, us and co-writer Stephen McFeely set to return. A spin-off is also in the works, written by acclaimed screenwriters Paul Wernick and Rhett Reese. pic.twitter.com/UjMyEr6iLp— Russo Brothers (@Russo_Brothers) July 26, 2022