Skip to main content

பெண்கள் தினம்... பொம்மி கதாபாத்திரம் குறித்து ஜி.ஆர்.கோபிநாத் நெகிழ்ச்சி!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

suriya

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவான திரைப்படம் 'சூரரைப் போற்று'. கரோனா நெருக்கடி காரணமாக ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தில் சூர்யா ஏற்று நடித்த நெடுமாறன் கதாபாத்திரமும், அபர்ணா பாலமுரளி ஏற்று நடித்த பொம்மி கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன.

 

உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினத்தை முன்னிட்டு, பொம்மி கதாபாத்திரம் குறித்து ஜி.ஆர்.கோபிநாத் ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், "பொம்மி கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக சுதா கொங்கராவைச் சிறப்புமிக்க இந்த நாளில் வணங்குகிறேன். தைரியமிக்க பெண் மற்றும் குடும்பத்தினரை உடன் வைத்துக் கொண்டு அனைத்துத் தடைகளையும் தாண்டி தன்னுடைய கனவை நிறைவேற்றிய பெண்ணின் கதாபாத்திரத்தில் அபர்ணா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தன் லட்சியத்தை நோக்கிச் செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் உத்வேகமளிக்கக்கூடிய கதாபாத்திரம் பொம்மி கதாபாத்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்