சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியான 'காலா' படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதற்கிடையே 'காலா' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on 13/06/2018 | Edited on 14/06/2018