நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இந்த நிலையில், கரோனா சமயத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.எம். குமார். அதில்... "ஆமை தன் வீட்டை முதுகிலேயே எங்கு சென்றாலும் சுமந்து செல்கிறது. மிக அவசியமான காரியங்களுக்கு மட்டும் தன் தலையை வெளியே தள்ளி, வேலையை முடித்துவிட்டு மீண்டும் தலையை தன் வீட்டிற்குள் இழுத்து கொள்கிறது. (Work from home) வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற யோசனையை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் Mr. ஆமையார்" என பதிவிட்டு கரோனா ஊரடங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.