Skip to main content

7 பேரை விடுதலை செய்யகோரி ட்வீட் செய்யும் திரை பிரபலங்கள்...

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
sasa


ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாளுக்கு நாள் பலரின் ஆதரவுகள் சமூக வலைதளத்தில் வலு சேர்ந்துகொண்டே வருகிறது. நளினி, முருகன். பேரறிவாளன், ராபர்ட் பியஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 28 வருடங்களாக சிறையில் காலத்தை கழித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனுடைய இளமை பருவம் அனைத்தும் சிறையிலேயே கழிந்துள்ளது. 
 

ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் 28 ஆண்டுகள் சிறையில் இருப்பதை தமிழ்த் திரையுலக பிரபலங்கள் #28YearsEnoughGovernor என்று குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
 

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது இந்த 7 பேர் விடுதலைக்காகவும் ட்விட்டரில் குரல் கொடுத்திருக்கிறார். அதில், “இது தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, மனித உரிமை சமந்தப்பட்டது. தயவு செய்து கருணை கொள்ளுங்கள் மரியாதைக்குரிய ஆளுநரே. தற்போதே செயல்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
 

இவரை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித்,  “அன்புக்குரிய கவர்னரே, சிறை தண்டனை மட்டுமே தீர்வு அல்ல.. நியாயத்தின் படி செயல்படுங்கள்..” என்று பதிவிட்டுள்ளார். இயக்குனர் ராம்,  “திறக்கட்டும் கதவுகள். கவர்னரைச் சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்