
தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இப்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’, இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இன்னும் பெயரிடாத ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இப்படங்கள் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகமாகவுள்ளார்.
இதில் கார்த்திக் ஆர்யனுடனான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீலீலா ரசிகர் ஒருவரால் கூட்டத்தில் இழுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கூட்டத்தில் கார்த்தி ஆர்யன் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் நடந்து சென்று கொண்டிருக்கையில் ஸ்ரீலீலாவை ரசிகர் ஒருவர் இழுத்தார். உடனடியாக அருகில் இருந்த படக்குழுவை சேர்ந்தவர்கள் ஸ்ரீலீலாவை தடுத்து காப்பாற்றினர். ரசிகர் இழுத்ததும், அதிர்ச்சியடைந்த ஸ்ரீலீலா பின்பு சிரித்துக் கொண்டே நகர்ந்து சென்றார்.