Skip to main content

சிம்புவுக்கு வில்லனாகும் ஃபகத் பாசில்?

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

fahadh faasil plays negative role silambarasan corona kumar film

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். இயக்குநர் கோகுல் 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் ஃபகத் பாசில்   நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலுடன் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து 'கொரோனா குமார்' படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே நடிகர் ஃபகத் பாசில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்