Skip to main content

"ஹாலிவுட் எதற்கு... இந்தியா இருக்கு... " இயக்குநர் ராஜமௌலி பேச்சு  

Published on 11/12/2021 | Edited on 11/12/2021

 

director ss rajamouli talk abou rrr movie

 

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

ad

 

இந்நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள படக்குழுவினர், சென்னையில் நேற்று (10.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய இயக்குநர் ராஜமௌலி, "சென்னை வரும்போது பள்ளி மாணவனைப் போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அது எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதனால் அரசியல் பேச வேண்டாம், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை குறித்து மட்டும் பேசுவோம். ‘பாகுபலி’ போன்றே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயம் பேசப்படும். தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை தேர்வு செய்கிறதோ அவர்களைத்தான் நான் இயக்குவேன். ஏன் ஹாலிவுட் நடிகர்களை வைத்து படமெடுக்கும் வேண்டும்? இந்தியாவிலேயே திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை  வைத்து ஹாலிவுட் படம் பண்ணுவோம்" எனத் தெரிவித்துள்ளார்    

 

சமீபத்தில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த ட்ரைலர், யூடியூப் தளத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்