சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் ‘நான் அவளை சந்தித்த போது’. பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்த சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சாந்தினி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
![nithyananda](http://image.nakkheeran.in/cdn/farfuture/TBZzrNv6N04UZ2SRP8agsZTM5JinW91GS6qW-qPMUvo/1576042737/sites/default/files/inline-images/nithyananda.jpg)
‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படம் இம்மாதம் 27ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது இயக்குனர் பேரரசுவும் கலந்துகொண்டு பேசினார்.
அதில், “கைலாசாபோல ஒரு தனி நாடு அமைக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. தனி நாடு அமைக்க உடன் ஐந்து சிஷ்யை தேவை. அதற்கு நடிகர் சாம்ஸ்தான் உதவ வேண்டும். சிஷ்யைகள் ஐந்து பேரும் நன்கு கெட்ட வார்த்தை பேச வேண்டும். அதுதான் அவர்களுக்கு சிஷ்யைக்கான தகுதி” என்று பேசியுள்ளார்.
நித்தியானந்தா அண்மையில் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.