'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் முன்னுரை பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார். மேலும் அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் பாரதி, இளையராஜா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பிறவிப்பயன், ஊழ்வினைப் பயன், குரு கிருபை என்றிருக்கும் இளையராஜா அவர்களை அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஒப்பீடு குறித்து விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அண்ணல் அம்பேத்கரை அனைத்து மக்களுக்குமான பொதுத் தலைவராக பார்க்கும் பார்வை கொண்டுள்ளனர்..?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிறவிப்பயன், ஊழ்வினைப் பயன், குரு கிருபை என்றிருக்கும் இளையராஜா அவர்களை அண்ணல் அம்பேத்கர் பற்றிய ஒப்பீடு குறித்து விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அண்ணல் அம்பேத்கரை அனைத்து மக்களுக்குமான பொதுத் தலைவராக பார்க்கும் பார்வை கொண்டுள்ளனர்..? #அண்ணல்_அம்பேத்கர் #இளையராஜா pic.twitter.com/zmab1hs8Pl— leninbharathi (@leninbharathi1) April 19, 2022