Skip to main content

கைவிடப்படுகிறதா 'கொரோனா குமார்' திரைப்படம்? இயக்குநர் கோகுல் விளக்கம்

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

director gokul said Corona Kumar film Can Never Be Dropped

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். இயக்குநர் கோகுல் 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கரும், வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சிம்புவிற்கு இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடு 'கொரோனா குமார்' திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் 'கொரோனா குமார்' படத்தின் இயக்குநர் கோகுல் இதற்கு விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "'கொரோனா குமார்' திரைப்படம் நிச்சயம் எடுக்கப்படும். இது குறித்து பரவும்  செய்திகள் அனைத்தும் வதந்தியே. படம் தொடங்கப்படும் பொழுது படத்தின் முழு விவரங்களும் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்