நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்திலும், ஆனந்த் எல். ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே' படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ரங் தே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கவுள்ள இப்படம் தமிழ் மற்றும் நேரடி தெலுங்கு படமாக வெளியாகவுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்த நடிகர் தனுஷ் நாளை (23.12.2021) காலை 9.36 மணிக்கு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வரும் விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படமும் தமிழ் மற்றும் நேரடி தெலுங்கு படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
My next Tamil film and my first direct telugu film .. title announcement tom 🙏🙏 Om Namashivaaya pic.twitter.com/cnaeMXO2h0— Dhanush (@dhanushkraja) December 22, 2021