Skip to main content

'த்ரிஷ்யம் 2' ரீமேக்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

jeethu joseph

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

 

vdsbvs

 

இந்த நிலையில், 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்று வருகிறது. இவ்வரவேற்பைக் கண்ட பிறமொழித் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படத்தை தங்கள் மொழியில் ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், 'த்ரிஷ்யம் 2' படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

தெலுங்கிலும் ஜீத்து ஜோசப் இயக்க, வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை மார்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. படப்பிடிப்பு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'த்ரிஷ்யம் 2' ரீமேக்கின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

drishyam 2 telugu version release date announced

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கிய  த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்றது.

 

இப்படத்தின் வெற்றியை பார்த்த மற்ற மொழி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மொழியில் த்ரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இயங்கியுள்ளது.  அந்த வகையில் தெலுங்கில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனா, நதியா, எஸ்தர் அனில் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

இந்நிலையில் தெலுங்கு த்ரிஷியம் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 25 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாக நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

 

Next Story

ஹிந்திக்கு போகும் 'த்ரிஷ்யம் 2' படம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

gedggers

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், 'த்ரிஷ்யம் 2' தற்போது வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. 

 

முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்றது. இவ்வரவேற்பைக் கண்ட பிறமொழித் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படத்தை தங்கள் மொழியில் ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், நடிகர் வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், நடிகர் ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது.

 

இந்நிலையில் தற்போது 'த்ரிஷ்யம் 2' படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள பனோரமா ஸ்டூடியோஸின் குமார் மங்கத் பதக் இதுகுறித்து பேசும்போது, " 'த்ரிஷ்யம் 2'-ன் வெற்றியைத் தொடர்ந்து அந்தக் கதை மற்ற மொழிகளிலும் அதே அளவு அர்ப்பணிப்புடனும் உணர்ச்சியுடனும் சொல்லப்பட வேண்டும். தயாரிப்பாளர்களாக எங்களுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் 'த்ரிஷ்யம் 2' படம் ஹிந்தியில் உருவாவது உறுதியாகியுள்ளது.