தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வடசென்னை படம் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார் தனுஷ். ஆனால், அதற்கு முன்பாக மேலும் ஒரு படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். அது அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்று. வட சென்னை பட விழா ஒன்றில் தெரிவித்திருந்தார் தனுஷ். அந்த படத்தை கலைப்புலி தானு தயாரிக்கிறார், படத்திற்கு அசுரன் என பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. தனுஷ் தனது தோற்றத்தை இதில் முழுவதுமாக மாற்றியிருந்தார் என்பது அந்த போஸ்டர் லுக்கிலேயே தெரிந்தது.
சினிமா வட்டாரத்தில் இந்த படம் நாவல் ஒன்றை தழுவி எடுக்க உள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அடுத்து தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கிறார்கள் என மேலும் தகவல் வந்தது. தற்போது ஷூஸ் ஆப் தி டெத் எனும் இந்திய ஆங்கில நாவலை தழுவி எடுப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு நாவலுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்ன என்றால் விவசாயியை மையப்படுத்திய நாவல்கள்தான் இவை இரண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் பல சமூக விஷயங்களில் கலந்துகொண்டு குரல் கொடுக்கிறார். என் படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலும், அரசியலும் பேசுவேன் அது எனக்கு மிகவும் எளிதான ஒன்று என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அசூரன் படம், விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்க உள்ள படமாக இருக்கும் என்று தகவல்கள் சொல்லப்படுகிறது.