Skip to main content

மூன்று மொழிகளில் வெளியாகிறது கிரைம் திரில்லர் "டெக்ஸ்டர்"

Published on 31/12/2024 | Edited on 31/12/2024
dexter as a crime thriller movie

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக் கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் பிடியில் அப்பாவியான யாமினி, புவி என இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த சைக்கோவிடமிருந்து இருவரையும் கதாநாயகன் ஆதி காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடூரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா? என்று திகிலுடன் சமீபத்தில் வந்த ராட்சசன், போர் தொழில் படங்களின் வரிசையில் விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் திரில்லருடன் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர் சூரியன்.ஜி

ராம் எண்டர்டைனர்ஸ் சார்பில் பிரகாஷ் S.V தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் தயாரித்துள்ள இப்படத்தை சூரியன்.ஜி இயக்கியுள்ளார். ராஜீவ் கோவிந்த் மற்றும் அபிஷேக் ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்க யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.வில்லன்களாக ஹரிஷ் பெர்டி, நடிக்க அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகளும் இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு குடகு மலை,கே ஜி எஃப், ஓசூர், வயநாடு போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. நிறைவு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரியில் வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்