பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது.

மூன்று கட்டங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியும் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுவிட்டார்.
இந்நிலையில் கடந்த மாதம் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் சாங் நவம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து நாளை தமிழ் மற்றும் தெலுங்கு தர்பார் மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் ரிலீஸ் செய்வதாகவும், மலையாளத்தில் மோகன் லால், ஹிந்தியில் சல்மான் கான் ரிலீஸ் செய்வதாகவும் இயக்குனர் முருகதாஸ் அறிவித்துள்ளார்.