Skip to main content

“தர்பாரால் அந்த நிறுவனத்திற்கு ரூ.70 கோடி நஷ்டம் ”- விநியோகஸ்தர்கள் புலம்பல்

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் தார்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. தற்போது இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாட்டில் தர்பார் படத்தை விநியோகம் செய்த சில விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
 

darbar

 

 

நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட தர்பார் விநியோகஸ்தர்கள் பேசுகையில்,“தமிழ்நாட்டிலுள்ள பல விநியோகஸ்தர்கள் சேர்ந்து தர்பார் படத்தை வாங்கினோம். முதல் ஒரு வாரத்திலேயே எங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பை லைகா நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினோம். அப்போத் அவர்கள் இது சூப்பர் ஸ்டார் படம், எங்களுக்கும் வசூல் குறைந்துவிட்டது என்று தெரிகிறது. நாங்கள் எங்களுடைய சாரிடமும் பேசுகிறோம், ரஜினி சாரிடமும் பேசுகிறோம். ஒரு சூப்பர் ஸ்டாரின் படம் பத்து நாட்களில் எடுத்துவிட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று இரண்டு வாரங்கள் அந்த கஷ்டங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தோம். கடைசியில் லைகா எங்களிடம் தெரிவித்தது, எங்களுக்கு 70 கோடி நஷ்டம். ரஜினி சாருக்கும், இயக்குனருக்கும் பெரிய சம்பளமாக கொடுத்துவிட்டோம் அதனால் நீங்கள் அவர்களிடம் சென்று பாருங்கள் என்று கூறிவிட்டனர். 

அவர்கள் சொன்னதை அடுத்து ரஜினி சாரை பார்க்கப்போனோம், அப்பாயின்மெண்ட் எங்களுக்கு தருவார் என்று பார்த்தோம் ஆனால் தரவில்லை. இன்று(03-02-20) அவரை பார்ப்பதற்காக சென்றோம் அப்போது போலீஸ் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களை பார்க்கக்கூடாது என்றும், அந்த சாலையிலேயே நிற்க கூடாது என்றும் சொல்லிவிட்டது போலீஸ். அதனை அடுத்து ஓரமாக போய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுப்பதாக இருந்தோம் உடனடியாக ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்று சுதாகர் என்பவரிடம் உங்கள் மனுவை கொடுங்கள் என்றனர். இங்கு வந்தால் சுதாகர் எனக்கு அந்த மனுவை வாங்க எனக்கு உரிமை இல்லை நீங்கள் லைகாவை போய் பாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

இப்படியே எங்களை அங்கையும் இங்கையும் போ என்று சொன்னால் இத்தனை கோடி போட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை வாங்கி 64 கோடிக்கு அதை விற்றுவிட்டு, 25 கோடி நஷ்டம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களையே நீங்கள் பார்க்கவில்லை என்றால் மற்றவர்களை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள். இப்படியே போனால் நாங்கள் என்ன ஆவது” என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்