தமிழ்நாடு அரசு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்களை எடுத்து அனுப்புமாறு குறும்பட போட்டி ஒன்றினை நடத்தியது. இதில் கலந்து கொண்ட பல படங்களில் குறும்பட இயக்குநர் சரவணன் இயக்கிய ’பி அலர்ட்’ குறும்படம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழையும் பரிசுத்தொகையையும் பெற்றது.
பி அலர்ட் குறும்படமானது சைபர் கிரைம் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஆட்டோக்காரருக்கு ஹவுசிங் லோன் இஎம்ஐ கட்டவேண்டும் என்பதை நினைவூட்டும் போன் காலில், கஷ்டமர் கேர் பெண் ஒரு ஆபஃர் இருக்கிறது நீங்கள் கட்ட வேண்டிய தொகையை விட கொஞ்சம் கம்மியாக கட்டலாம் என்றதும் அந்த பெண் அனுப்பும் லிங்கிற்கு பணம் அனுப்புகிறார். மற்றொரு இளைஞன் பேஸ்புக்கில் உள்ள ஒரு பெண்ணிற்கு வீடியோ கால் செய்து பேசுகிறார். மூன்றாவதாக ஒருவர் ஆப்பிள் போனுக்கு ஆஃபர் இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள் என்ற போன் குரலை நம்பி ஆர்டர் போட்டு தயார் ஆகிறார்.
இதனையடுத்து ஆட்டோக்காரருக்கு உண்மையாகவே போனில் தொடர்புகொண்டு பேங்கிலிருந்து பணம் கேட்க தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். வீடியோ கால் இளைஞன் முகத்தை ரெக்கார்ட்டிங் செய்து அந்த பக்கத்திலிருந்து மிரட்டி பணம் கேட்கப்படுகிறது. ஆப்பிள் போன் ஆர்டர் போட்டவருக்கு வேறு பொருள் வந்து சேர்கிறது.இவ்வாறாக பல்வேறு வழிகளில் நாட்டில் நடக்கிற இணையவழி மோசடிகள் குறித்த விசயங்களை, 3 சம்பவங்களை விழிப்புணர்வாக ’பி அலர்ட்’ குறும்படம் பேசுகிறது. இவ்வாறான விழிப்புணர்வு குறும்படங்கள் நிறையா எடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறை சைபர் கிரைம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.