Skip to main content

கலகத் தலைவனை பாராட்டிய கழகத் தலைவர்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

cm stalin praises udhayanithi kalagathalaivan movie

 

உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் 'கலகத் தலைவன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 

இந்நிலையில் தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின், கலகத் தலைவன் படத்தை ஒரு தனியார் திரையரங்கில் பார்த்துள்ளார். அவருடன் உதயநிதி, மகிழ் திருமேனி உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் இருந்துள்ளார்கள். படத்தைப் பார்த்த முதல்வர் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியுள்ளதாக உதயநிதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் நாளை (18.11.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்