தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு. தற்போது அவருடைய கனவுப்படத்தை சாத்தியமாக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.
பல வருடங்களாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் தள்ளிப் போய்விடுகிறது.
தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்தும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களை வைத்தும் ‘பொன்னியின் செல்வன்’படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பட்ஜெட் பெரிதாக இருப்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் மணிரத்னம் என்றும் சொல்லப்பட்டது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 படம் தள்ளிப்போனதால் அந்த படத்திலிருந்து விலகிக்கொண்டு பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் ரவிவர்மன். இது மன்னர் காலத்து கதை என்பதால் இந்த கதைக்கான லொக்கேஷன்களை தேர்வு செய்யும் முதற்கட்ட பணிகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியன் 2 படக்குழுவில் இருந்த பிரச்சனைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படக்குழு ஷூட்டிங்கை தொடங்க இருக்கிறது. ரவிவர்மன் படத்திலிருந்து விலகியுள்ளதால் வேறொரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார் ஷங்கர். எந்திரன் படத்தில் பணிபுரிந்த ரத்னவேலுவைதான் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது.