Published on 11/03/2023 | Edited on 11/03/2023
சென்னை சாலி கிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் தென்னிந்திய சினி, டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக சினிமா டப்பிங் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடடத்தை கடந்த 2011ஆம் ஆண்டு ராதாரவி 45 லட்சம் ருபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தை விதிகளை மீறி கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து பலமுறை ராதாரவியிடம் விளக்கம் கேட்கப்பட்டும் உரிய பதிலளிக்காமல் ராதாரவி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த புகார் தொடர்பாக ராதாரவி தரப்பில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது சினிமா டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.