Skip to main content

அஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி!

Published on 12/08/2020 | Edited on 12/08/2020
chiranjeevi

 

 

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி 'ஆச்சாரியா' என்னும் படத்தில் நடித்து வந்தார். கொரட்டல சிவா இயக்கும் இப்படம் காரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த படத்தை தொடர்ந்து மோகன் லால் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான லூசிஃபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார் சிரஞ்சீவி.  அதேபோல அஜித் நடிப்பில் ஹிட்டான வேதாளம் படத்தின் ரீமேக் உரிமையையும் பெற்றுள்ளனர்.

 

முதலில் 'லூசிஃபர்' ரீமேக்கை 'சாஹோ' இயக்குநர் சுஜீத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன் ரீமேக்கிற்காக சுஜீத் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு பிடிக்கவில்லை என்பதால், அவர் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். விரைவில் வி.வி.விநாயக் இயக்குநராக பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியானது.

 

இதனிடையே 'வேதாளம்' ரீமேக் பணிகள் சுறுசுறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. மெஹர் ரமேஷ் இயக்க, அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இதில் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

 

வேதாளம் படத்தின் பணிகள் தீவிரமாகிவிட்டதால் லூசிஃபர் படத்தினை தள்ளிவைத்துவிட்டு, முதலில் வேதாளம் படத்தில் நடித்து முடித்துவிடலாம் என்று சிரஞ்சீவி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்