Skip to main content

விக்ரம் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த சென்னை காவல்துறை!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021


 

chennai police has denied permission for vikram movie shooting

மாஸ்டர் படத்தின்  வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில்,  அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராமன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

 

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள விக்ரம் படக்குழு, சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. மேலும் விக்ரம் படத்திற்காக 24 மற்றும் 25 தேதிகளில் அரங்குகள் அமைக்கவும், 26 மற்றும் 27 தேதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி கேட்டு இருந்த நிலையில் தற்போது இதற்குச் சென்னை காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். 

 

இது தொடர்பாகச் சென்னை காவல்துறை விக்ரம் படக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்," கரோனா விதிமுறை நடைமுறையில் உள்ளதால், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எந்த நிகழ்வும் நடத்த முடியாது " எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினிகாந்த்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
 Political party leaders - birthday wishes Rajinikanth

தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்தின் 73 வது பிறந்ததினம், உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு நபர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். 

 Political party leaders - birthday wishes Rajinikanth

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது பதிவில் “அன்பு சகோதரர் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்யத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Kamal

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் “அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இன்றும் என்றும் வெற்றிகளை அறுவடை செய்தபடி உற்சாகமாக வாழ மனதார வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

A

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் “தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று 73-ஆவது பிறந்தநாள். அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றிருக்கிறார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் “தனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை உடை பாவனைகளாலும் எல்லோரது மனதையும் வென்று, உலகப்புகழ் பெற்ற திரையாளுமையாகத் திகழும் தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு அன்புநிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Next Story

“உடையாத உடல்; சரியாத மனம்” - கமல்ஹாசனுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 vairamuthu congratulates Kamal Haasan

 

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் எனப் பல துறைகளிலும் வல்லவர் நடிகர் கமல்ஹாசன். திரைத்துறையையும் தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கி அரசியல் செயல்பாடுகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளையொட்டி திரைப் பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

அவரது எக்ஸ் பக்கத்தில் "நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன். இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது. வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர். எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்?  உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும். வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்