கரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட பத்து மாத இடைவெளிக்கு பிறகு 'மாஸ்டர்' மற்றும் 'ஈஸ்வரன்' படங்களின் ரிலீஸ் மூலம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது தமிழ் திரையுலகம். எனினும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி என்ற விதிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறைகளை மீறி அதிக மக்களை அனுமதிக்கும் திரையரங்குகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவர் இதுகுறித்து பேசியபோது திரையரங்குகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.