Skip to main content

அஜித் பிறந்தநாளுக்கு பாடல் வெளியிட்ட இசையமைப்பாளர்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
vsdg

 

தமிழ் சினிமாவில் மிக அதிக எண்ணிக்கையில் மிகத் தீவிர ரசிகர்களை கொண்ட சில நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித்தின் 49வது பிறந்தநாள் (நாளை) மே 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரசிகர்களால் அன்பாக 'தல' என்று அழைக்கப்படும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் சி.சத்யா அவருக்காக பிறந்தநாள் பாடல் ஒன்றை இசையமைத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கூடவே.. 

''எங்க தல எங்க தல பாடல் 
உங்களுக்காக 

"ஆறுகோடி பேருக்குமே 
ஒரே தலபாரு 
தலைக்கனமே இல்லாத எங்க 
அல்டிமேட்டு ஸ்டாரு" என பதிவிட்டுள்ளார். 

'எங்க தல எங்க தல' என தொடங்கும் இந்த பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்