Skip to main content

ஆண் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை தோலுரித்துக் காட்டும் படம்!

Published on 20/07/2018 | Edited on 21/07/2018
botha

 

 

 

ஆண் பாலியல் தொழிலாளி பற்றிய கதையில் உருவான 'போத' படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளா ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி இப்பட அனுபவம் குறித்து பேசியபோது.... "சின்ன வயது முதலே எனக்கு  சினிமாவில் நடிக்க ஆசை இருந்தும் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க அதீத ஆசை ஏற்பட்டது. காரணம் என் தந்தை ராஜசேகர். பல வருடங்களுக்கு முன் 'எத்தனை மனிதர்கள்' உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என்  தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை எனது ஆசை மற்றும் லட்சியமானது. சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த நான் பெசன்ட் நகரில் உள்ள 'ஆக்டர்ஸ் ஸ்டுடியோ' எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில்  நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடினேன்.

 

 

வடகறி, அச்சமில்லை அச்சமில்லை, நிலா உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும், பெரிதுமான கதாபாத்திரங்களில் நடித்தபடி நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். பின்னர் பெசன்ட் நகர் 'ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ' ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு  கற்றுத் தந்தபடி கோடம்பாக்கத்தையே வலம் வந்துகொண்டிருந்த சமயம் நண்பர்  கணேஷ்  மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில்  "போத" பட வாய்ப்பு வந்தது. இதில் நான் ஆண் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடித்துள்ளேன்.ஆனால் இந்த வேடம்  ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே வரும். மற்றபடி மொத்த திரைக்கதையிலும் சரி, தப்பு எது என்று தெரியாமல், பொய், திருட்டு என பணத்தை துரத்துவது தான் என் கதாபாத்திரம். மேலும் படத்தில் கதாநாயகி இல்லை என்றாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருப்பதால் குடும்பத்துடன் சென்று இப்படத்தை பார்க்கலாம்" என கேரண்டி கொடுத்துள்ளார் விக்கி.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்