Skip to main content

''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

கதாசிரியர் கலைஞானத்திற்கான பாராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சினிமாத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் விழாவை ஏற்பாடு செய்த இயக்குனர் சங்க தலைவர் பாரதிராஜா ரஜினி குறித்து பேசியபோது...   

 

Bharathiraja

 

''நான் அவ்வப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதளவில் காயப்படுத்தியுள்ளேன். ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அருமையான மனிதர் அவர். அவர் ஒரு பெரிய ஆன்மா. தராசு போட்டு மக்களை பிடித்தவர் அவர். எந்த விஷயத்தையும் சரியான கலவையில் கொடுத்தவர். அவர் பார்ப்பது, விரும்பவதெல்லாம் கிளாசிக் படங்கள். ஆனால் அவரோ தன் ஆசைகளை மறந்துவிட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் கொடுப்பார். ஆறிலிருந்து அறுபது வரை படமும் செய்வார், குரு சிஷ்யனும் செய்வார். ஒருமுறை குரு சிஷ்யன் படம் முடிந்த சமயம் ரஜினி என்னை அந்த படத்தை பார்க்க அழைத்தார். நானும் சென்று படத்தை பார்த்தேன். 

 

 

என் டேஸ்டிற்கு அந்த படம் இல்லாததால் படம் பிடிக்கவில்லை என்று ரஜினியிடம் சொன்னேன். உடனே ரஜினி 'இந்த படம் ஹிட்' என சொல்லி, உனக்கு பிடிக்கலைன்னா ஹிட் அப்படின்னார். அந்த அளவு என்னையும், மக்களையும் படித்து வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர் ரஜினி. மேலும் நான் எல்லோருக்கும் விழா எடுத்துவிட்டேன். நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் உங்களுக்கு விழா எடுத்துவிடுகிறேன் என்று ரஜினியிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் நாம் இருவரும் எதிரெதிர் முனையாகிவிடுவோம் அதனால் என் நண்பா, என் நட்பிற்கு உரியவரே மதுரை மண்ணில் உனக்கு பெரிய விழா எடுக்க எனக்கு ஆசை என்றேன். ஆனால் அவரோ முடியவே முடியாது வேண்டாம் என்கிறார். இருந்தாலும் நான் விடாமல் அவரை கேட்டுக்கொண்டே இருப்பேன்'' என்றார்.

 

  

சார்ந்த செய்திகள்