Skip to main content

 தடம் பிரஸ் மீட் சர்ச்சை குறித்து பேசும் அருண் விஜய்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

தடம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் அருண்விஜய் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நல்ல ஓப்பனிங்குடன் வெளியான தடம் திரைப்படத்தைப் பார்க்கவரும் ரசிகர்கள் எண்ணிக்கை கனிசமாக அதிகரிக்கிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்வில் நடிப்பிலும் தோற்றத்திலும் தன்னை மெருகேற்றித் தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டே வருகிறார். இதுவரை இருபத்தைந்திற்கும் குறைவானப் படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் அவற்றில் அருண் விஜயின் வெற்றிகள் மற்றும் சிலத் தோல்விகளின் அனுபவம் அதிகம். தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க தடத்தைப் பதித்திருக்கும் அவரின் தடம் பற்றிய அனுபவங்கள்... 
 

arun vj


உங்களுடைய வாழ்க்கைப் போரட்டங்களில் உங்களுக்கான தன்னம்பிக்கை எங்கிருந்துக் கிடைக்குது. சுய ஊக்குவிப்பா அல்லது யாரையாவதுப் பார்த்துக் கத்துக்குறீங்களா?

சினிமாவில் எனக்கு முன்உதாரணமாக நிறையப்பேர் இருக்காங்க. முக்கியமாக விக்ரமை போன்றவர்கள் தோல்விகளிலும் தளராமல் ஜெய்ச்சவுங்க. என்னோடத் தோல்விகள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்தது. அது நல்லதுதான் என நினைக்கிறேன், சுலபமா கிடைச்சுட்டா அதோட மதிப்புத் தெரியாமல் போயிடும். இப்போ என் வெற்றியோட மதிப்பு தெரியுது. அதைத் தக்கவச்சுக்க என்னலாம் செய்யணும்னு யோசிக்கவைக்குது. ஒரு கட்டத்தில் என்னோட வொர்த் எனக்குத் தெரிஞ்சுது. என்னால் எதையும் செய்ய முடியும்குற நம்பிக்கை வந்துச்சு. அந்த நம்பிக்கையால் எல்லாம் சரியாக அமைஞ்சுது.
 

சமூக செயல்பாடுகளிலும் நீங்கள் ஆர்வத்தோடு இருக்கீங்க. கஜா புயலின்போதும், கேரளாவில் வெள்ளம் வந்தபோதும் உங்களுடைய பங்கு முக்கியமானது. நீங்கள் போகும்போது அங்க வரவேற்பு எப்படி இருந்துச்சு. உங்களை நடிகராகப் பார்த்தாங்களா இல்ல அவங்ககிட்ட ஏக்கம் மட்டும்தான் இருந்துச்சா?

நான் ஒரு நடிகராக அங்கேப் போகலை. சகமனிதனாக தான் அங்கேப் போனேன். நான்போய் பெருசா செஞ்சுட முடியாது, அவங்க வாழ்க்கையை என்னால் மாற்ற முடியாது. ஆனால், நாங்கலெல்லாம் உடன் இருக்கோம்குற நம்பிக்கை அவங்களுக்குக் கிடைக்கும். ஏனென்றால் சென்னையில் வெள்ளம் வந்தபோது நாம் எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு எனக்குத் தெரியும். மற்றும் ஒரு நடிகராக இருக்கிறதால் என்னைப் பார்த்து மற்றவர்கள் ஊக்கமடைவாங்க. அவங்களுக்கும் எதாவது செய்யனும்னு தோன்றும். அது ஒரு தொடக்கமாக இருக்கும்.
 

தடம் திரைப்படம் எந்தமாதிரியான இமேஜை உங்களுக்குக் கொடுக்கும்.

மகிழ் சார் தடயறத் தாக்க படத்தின்போதே நிறைய ப்ராமிஸ் பண்ணியிருந்தார். அது எல்லாமே நடந்துச்சு. அதேபோல் இப்பவும் நிறைய சொல்லியிருக்கார். “அருண், உங்களுக்கு இந்தப் படத்துக்குப் பிறகு நிறையப் பெண் ரசிகர்கள் கிடைப்பாங்க, ஒரு நடிகராக மக்கள் உங்களைப் புது பரிமாணத்தில் பார்ப்பாங்க” என்றெல்லாம் சொல்லியிருக்கார். எனக்கு அவர்மேல் நிறைய நம்பிக்கையிருக்கு. நைட் நா லு மணிக்கெல்லாம் ஒன்மோர் சூட் பண்ணலாம்னு கேப்பாரு. அவருக்கு ஒன்னு சரியில்லையினா அதை திரும்பவும் முழுசா சூட்பண்ணி தேவையானதை மட்டும் எடுத்து பயன்படுத்துவார்.
 

படத்தில் லிப் லாக் வேண்டாம்னு சொல்லிருக்கீங்க. இதுபோல் உங்கப் படத்தில் வேண்டாம்னுச் சொல்லி எதையெல்லாம் தவிர்ப்பீங்க?

எனக்கெனச் சில கட்டுப்பாடுகளை வச்சுருக்கேன். எதெல்லாம் வேண்டாமோ அதையெல்லாம் முன்னாடியே சொல்லிடுவேன். முதலில் குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி இருக்கனும், அவர்களை முகம்சுளிக்க வச்சுடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பேன். சில கதைகளுக்கு அப்படி ராவானக் காட்சிகள் தேவைப்படலாம். அதற்கு பரவாயில்லை, தனிக்கைக்குச் சான்றிதழோடுதான் அது வெளிவரப்போகிறது. ஆனால், தேவையில்லாமல் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதுபோல் காட்சிகளை வைக்கமாட்டேன்.
 

arun vijay


என்னதான் நடந்தது தடம் படத்தின் பிரஸ் மீட்டில்? அதைப் பற்றிய யூ ட்யூப் வீடியோக்களில் இருக்கிற தலைப்புகளெல்லாம் சர்ச்சைக்குறியதாய் இருக்கிறதே?

அதெல்லாம் சும்மா ஒரு பரபரப்புக்காக பண்ணிவிட்டாங்க. யூ ட்யூப் பார்த்தால், அந்த தலைப்புக்கும் படத்துக்கும் சம்மந்தமே இல்லை. இருந்தாலும் போயிட்டுப்போது விடுங்க, எதோ ஒரு வகையில் படம் பேசப்படுதுனு விட்டாச்சு. ஆனால், குடும்பத்தோடுப் பார்க்கக்கூடிய படத்தைத்தான் நாங்கள் எடுத்திருக்கோம். பெண்கள், இளைஞர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். யோகிபாபு படம் முழுக்க இருக்கார். படத்தில் தேவையான அளவு நகைச்சுவையும் இருக்கும். மகிழ் சாருக்கு ஒரு மீட்டர் இருக்கு, அதில் எல்லாமே சரியாய் கலந்திருக்கும்.
 

அமிர்க்கானின் ‘தங்கல்’மாதிரி ஒரு கதையில் நடிப்பதற்காக உடனே 110 கிலோ உடல் எடையை அதிகமாக்கணும்னு சொன்னால் செய்வீங்களா?

கண்டிப்பா செய்வேன். நடிப்புதான் என் தொழில், அதுக்காக இதையெல்லாம் கண்டிப்பாக செய்வென். அதுமட்டுமில்லாமல் இத்தனை வருஷத்தில் என் உடம்பைப் பற்றி நான் நல்லா புரிஞ்சு வச்சுருக்கேன். உடம்பை ஏற்ற எத்தனை நாள் ஆகும், எத்தனை நாளில் இளைக்க முடியும்னு எனக்கு நல்லா தெரியும்.
 

விக்டர் மற்றும் தியாகு ஆகிய ரெண்டு கேரக்டர்களில் நிஜ வாழ்க்கையில் எந்தக் கேரக்டராக வாழ விரும்புவீங்க?

ரெண்டுமே ரெண்டுக் கண்கள் மாதிரிதான். இருந்தாலும் நிஜ வாழ்க்கைனு வரும்போதுத் தியாகு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன். விக்டர் வாழ்க்கை இருள் உலகத்திலேயே இருக்கும். ஆனால், விக்டர் துபாயில் அவனுக்குப் பிடித்தமாதிரி ஹைக் கிலாஸ் வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டுருப்பான். அதனால், பேச்சுக்காவது அவனைப் போல வாழலாம்னு நினைக்கிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்