ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் சினம் படம் குறித்து அருண் விஜய் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
“இந்தப் படம் எனக்கு யதார்த்தமாக அமைந்தது. போலீஸ் படங்கள் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டு நடிப்பதில்லை. அதேநேரத்தில், போலீஸ் படம் பண்ணும்போது சுவாரசியமான ப்ளாட், ட்விஸ்ட்களோடு கதை சொல்ல முடிகிறது. சினம் படத்தில் பாரி வெங்கட் என்ற சாதாரண எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய மற்ற கதாபாத்திரங்களில் இருந்து இந்தக் கதாபாத்திரம் தனித்துவமாக இருக்கும். இயக்குநர் கதை சொன்னபோதே அதில் வலுவான எமோஷன் இருந்தது. யானைக்குப் பிறகு இந்தப் படம் எனக்கு முக்கியமான படமாக இருக்கும். புதிய ரசிகர்களிடமும் என்னை கொண்டுபோய் சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
என்னுடைய முந்தைய படங்கள், நான் நடித்த கதாபாத்திரங்கள், புதிதாக இந்தப் படத்தில் என்ன சொல்ல முடியும் என்பதையெல்லாம் பார்த்துதான் ஒரு கதையில் நடிக்க சம்மதம் சொல்வேன். எந்தக் கதை கேட்டாலும் இதுதான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இதை வைத்துதான் என்னுடைய கேரியரை தொடர்ந்து வடிவமைத்துவருகிறேன்.
சினம் செப்டம்பர் 16ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் படம் பிடிக்கும்".